Thursday, April 15, 2021

 கண்அழுத்த நோய்: குழுக்கோமா


கண் அழுத்த நோய் (ஆங்கிலம்:Glaucoma) எனப்படும் கண் அழுத்த நோயானது, பார்வை நரம்பு சேதமாவதால் பார்வை இழப்பு நிலைக்கு விரைந்து முன்னேறுவதும், பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு செல்ல முடியாததுமான ஒரு கண் நோய் ஆகும். பல நேரங்களில். கண்ணில் உள்ள திரவ அழுத்தம் அதிகரிப்பதனாலேயே, இது விளைகிறது. ஆனால், வேறு பல காரணங்களினாலும், இந்நோய் கண்களில் உருவாகிறது..


கண் அழுத்த நோய்..

இந்நோயுள்ள கண்கள் வகைப்பாடு மற்றும் விபரக்குறிப்பு..


இது தனக்கே உரித்தான ஒரு குறிப்பிட்ட முறையில், விழித்திரையின் நரம்பு முடிச்சு அணுக்கள் இழப்பை ஈடுபடுத்துகிறது. கண்ணழுத்த நோயில், பல துணை வகைகள் உள்ளன. ஆனால், அவை யாவும் பார்வை நரம்பு இயக்கத்தடை என்பதன் வகைகளாகவே கருதலாம்..


அதிகரித்த உள்விழி அழுத்தம் (21 mmHg அல்லது 2.8 kPa இற்கு மேல்) கண் அழுத்த நோய் விளைவதற்கான ஒரு முக்கிய ஆபத்துக் காரணியாகும். ஒப்புமையில், சற்றே குறைந்த அளவு அழுத்தத்திலேயே ஒருவருக்கு நரம்புச் சேதம் உருவாகலாம், மற்றொருவருக்கு வருடக் கணக்காக மிக அதிகமான விழி அழுத்தம் இருப்பினும் சேதம் ஒன்றும் விளையாதிருக்கலாம். சிகிச்சை பெறாத கண் அழுத்த நோய் நிரந்தரமாக பார்வை நரம்பு சேதத்தில் விளையக் கூடும். இதன் விளைவாக, பார்வைத் தள இழப்பு ஏற்பட்டு, நிரந்தரமான, பார்வையின்மையை உருவாக்குகிறது..


இந்த நோய் நிலைக்கேற்ப மருந்துகளை பதிவு செய்கிறேன் பாருங்கள்..


1).. சுருமாக்கல் ..

முஸ்லிம் சகோதரர்கள் கண்ணிமைகளில் தீட்டும் கல்..

இதை கண்ணிமைகளில் தீட்டவேண்டும்.. 


2) பேதி மருந்து.

அவசியம் வாரத்திற்கு ஒரு முறை என்று மூன்று முறை எடுத்துக் கொள்ள வேண்டும்..


3).. பொன்னாங்கண்ணி தைலம்..

ஒரு டீஸ்பூன் அளவுக்கு உச்சந்தலையில் தேய்த்துக் கொண்டு வர வேண்டும்..


4).. பொன்நிமிளைச் செந்தூரம்..

ஒரு குன்றிமணி அளவுக்கு எடுத்து அதனுடன்.. பவளப் பற்பம்.. ஒரு குன்றிமணி அளவுக்கு சேர்த்து கலந்து தேனில் குழைத்து காலை மாலை என இரண்டு வேளையுமாக சாப்பிட வேண்டும்..


5).. கறிவேப்பிலையை தினமும் ஒரு கைப்பிடி அளவுக்கு மென்று சாப்பிட்டு வரவேண்டும்..

பரிபூரணமாக குணமாகும்..



No comments:

Post a Comment