Thursday, July 14, 2022

சிறு நெருஞ்சி சூரணம்.


 சிறு நெருஞ்சி சூரணம் :-

 மூட்டுவலி,மூட்டு தேய்மானம், முழங்கால் மூட்டுகள் தேய்ந்து போன நிலை,முதுகு தண்டுவட சவ்வு வீக்கம், டிஸ்க் பல்ஜ், டிஸ்க் ப்ரொலாப்ஸ், கழுத்து திருப்ப இயலாத நிலை, கழுத்து வலி, கைகால் மரத்துப் போதல், cervical spondylitis, lumbar spondylitis இது போன்ற மேலும் பல நோய் நிலைகளை குணப்படுத்தும் ஆற்றல் இந்த சூரணத்திற்கு உள்ளது.

Wednesday, July 13, 2022

பித்தப்பை கல் கரைய எண்ணெய்

 பித்தப்பை கல் கரைய எண்ணெய் செய்முறை:-

விளக்கெண்ணெய் - 1லி

பூண்டுச் சாறு.  1/2 லி 

இந்துப்பு.       30 கிராம்

பெருங்காயம். 10 கிராம் 

இவற்றை எண்ணெய்யில் கலந்து காய்ச்சி வடித்து இரவு உணவுக்கு பின் அரை டம்ளர் பாலில்,பத்து மில்லி அளவு கலந்து குடிக்கவும்.

இதனால் காலையில் இரண்டொரு முறை மலம் இலகுவாக வெளியேறும். அதிகமாக போனால் எண்ணெய்யை குறைத்தும்,சரியாக போகவில்லை எனில் மருந்தின் அளவை அதிகரித்தும் சாப்பிட வேண்டும்.

மேலும் இதனுடன் பிரண்டை உப்பும்,திராட்சாதி கசாய சூரணமும் சேர்த்து சாப்பிட்டு வர ஒரு மாதத்தில் பித்தப்பை கல் கரைந்து விடும்.




Sunday, April 17, 2022

சயாடிகா டிஸ்க் பல்ஜ் குணமாக

 தீராது என கைவிடப்பட்ட தண்டுவட மற்றும் ஃபைனல் கார்டு  நோய்கள், சவ்வு வீக்கம், டிஸ்க் பல்ஜ், கழுத்து எலும்பு தேய்மானம், முழங்கால் மூட்டு வீக்கம்,வலி இதனால் நிச்சயம் குணமாகும்.


🌷🌲💐👍#வாதகாஞ்சிரம் மாத்திரை செய்முறை🌷💐🌲👍


சிறப்பாக சுத்தி செய்த எட்டி விதை -500 கிராம்.

சுத்தி செய்த மிளகு-500 கிராம்.

சுத்தி செய்த சுக்கு-500 கிராம்.

சுத்தி செய்த கிராம்பு-500 கிராம்.

சுத்தி செய்த ஜாதிக்காய்-500 கிராம்.

சுத்தி செய்த ஜாதிபத்ரி -500 கிராம்.

             புரசம்  பிசின்      -500 கிராம்

சுத்தி செய்து கட்டிய ஜாதிலிங்க செந்தூரம் -300 கிராம்.

அயவீர செந்தூரம்-- 300 கிராம்


செய்முறை:-

    அனைத்து பொருள்களையும் இஞ்சி சாறு+எலுமிச்சை சாறு விட்டு மூன்று மணி நேரம் அரைத்து வில்லை ரவி உலர்த்திப் பொடித்து  ஜீரோ சைஸ் கேப்சூலில் அடைத்து வைக்கவும்.

இதனில் காலை ஒரு மாத்திரை, மதியம் ஒரு மாத்திரை உணவுக்கு பின் வெந்நீரில் சாப்பிட்டு வர கிடைக்கும் பயன்கள் பலன்கள்,

          தீராது என கைவிடப்பட்ட தண்டுவட மற்றும் ஃபைனல் கார்டு  நோய்கள், சவ்வு வீக்கம், டிஸ்க் பல்ஜ், கழுத்து எலும்பு தேய்மானம், முழங்கால் மூட்டு வீக்கம்,வலி இதனால் நிச்சயம் குணமாகும்.

     அனைத்து மூட்டு வலிகளிலும் சிறந்த #வலிநிவாரணியாக பயன்படுகிறது. மேலும் மூட்டு தேய்மானம் போன்ற பல விதமான நோய்நிலைகளை குணப்படுத்துகிறது.


சைனஸ் எனும் பீனிச நோயில் நன்கு வேலை செய்து விரைவில் நோயை குணப்படுத்துகிறது.


கைநடுக்கம்,கால்நடுக்கம், தலை நடுக்கம் குணமாக உதவுகிறது.


நரம்பு வலிகள், நரம்பு தளர்ச்சி, எலும்பு தேய்மானம், மூட்டுவலி , தோள்பட்டை வலி,  இடுப்பு வலி, ஆண்மையிழப்பு, நரம்பு பலவீனம், சைனஸ்,போன்ற நோய்கள் குணம் பெறுகின்றன.


சயாடிக்கா என்றால் என்ன?


            நமது உடலில் இரண்டு பெரிய, நீட்டமான நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் கை விரல் அளவு பெரியவை. இந்த நரம்புகள் கீழ் முதுகெலும்பிலிருந்து தொடங்கி பிட்டம், முழங்கால் இவற்றில் முடியும்.

முழங்காலிலிருந்து கிளைகளாக பிரிந்து கால் பாதம் வரை தொடரும். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால் வலி (சியாடிகா) இந்த நரம்பு முழுவதையும் தாக்கும். உடலின் இரு பக்கங்களில் சியாடிகா நரம்பு இருந்தாலும், அசாதாரணமாக பாதிப்பு (வலி) ஒரு பக்கத்தில் தான் நிகழும். சியாடிகா வலி தானாகவே மறையும்.

ஆயுர்வேதத்தில் ‘கிரிதரஸி’ எனப்படும் இடுப்பு வலி வாயுவால் உண்டாகும் என கருதப்படுகிறது. தவறான அங்கஸ்திதி, முதுகுவலி, சுளுக்கு இவைகளை ஆயுர்வேதம் காரணமென்கிறது. குளிர்காலமும், மலச்சிக்கலும் ஸியாடிகா பாதிப்புகளை தூண்டிவிடும்.

அறிகுறிகள்:-

‘சியாடிகா’ உடலின் ஒரு பக்கத்தை முடக்கும் கீழ் இடுப்பிலிருந்து பாதம் வரை வலி, இழுப்பு ஏற்படும். கால் விரல்களில் பாதத்தில் ஊசி குத்துவது போன்ற வலி, விட்டு விட்டு வலி, தீடீர் வலி இவை ஏற்படும். வலி குறைவாக இருக்கலாம்.

இல்லை தீவிர பொறுக்க முடியாத வலியும் ஏற்படும். பிட்டம், தொடை, ஆடுகால் தசை, பாதம் இங்கெல்லாம் வலி வரும். இந்த பாகங்களில் மரத்துப்போனது போன்ற உணர்ச்சிகளிருக்கும். இந்த மரத்துபோகும் சமயத்தில் முதுகு வலி (சில வேளைகளில்) இருக்காது.

அதனால் ஏதோ சுளுக்கு என்று நாம் அலட்சியமாக இருக்க நேரிடும். ஊசிகுத்தும் வலி, சிறுநீர் போவதை “கன்ட் ரோல்” செய்ய முடியாமல் போதல், இவை இருந்தால் உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும். காலை நீட்டினால் வலி, நடந்தால், மாடி ஏறினால் வலி என்றிருந்தால், ஸியாடிகாவாக இருக்கலாம்.


Saturday, August 21, 2021

பித்தப்பை கற்கள்

 பித்தப்பை கற்கள்:-


மனித உடலில் ஆறு இடங்களில் கல் உருவாக வாய்ப்புள்ளது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதை, பித்தப்பை, உமிழ்நீர்ச் சுரப்பிகள், மூக்கு, குடல், டான்சில் ஆகியவையே அந்த ஆறு இடங்கள். இவற்றில் சிறுநீரகக் கற்களைப் பற்றி தெரிந்த அளவுக்குப் பித்தப்பை, உமிழ்நீர் சுரப்பி உள்ளிட்ட மற்ற இடங்களில் உண்டாகும் கற்களைப் பற்றி மக்களுக்குத் தெரிவதில்லை.


சிறுநீரகக் கற்களுக்கு அடுத்தபடியாகப் பித்தப்பைக் கல்தான் (Gall stone) அதிகம் பேருக்குத் தொல்லை தரக்கூடியது. சமீபத்திய புள்ளிவிவரப்படி 100-ல் 15 பேருக்கு இந்தத் தொந்தரவு இருக்கிறது.


பித்தநீர்ச் சுரப்பு


நம் உடலில் உள்ள பல்வேறு சுரப்பிகளில் மிகப் பெரியது கல்லீரல். இதில் தினமும் 1000-த்திலிருந்து 1500 மி.லி.வரை பித்தநீர் சுரக்கிறது. பித்தநீர் என்பது ஒரு திரவக் கலவை. 97 சதவீதம் நீரும், 1 சதவீதம் பித்த நிறமிகளும், 1 முதல் 2 சதவீதம் வரை பித்த உப்புகளும் இதில் உள்ளன.


கல்லீரலில் சுரக்கும் பித்தநீர், வலது மற்றும் இடது பித்தநீர்க் குழாய்கள் வழியாக முன்சிறுகுடலுக்கு வந்து சேரும். அதற்கு முன்பாக ஒரு கிளைக் குழாய் வழியாகக் கல்லீரலுக்கு வெளியில் தொங்கிக் கொண்டிருக்கும் (Gall bladder) பித்தப்பையினுள் அது செல்லும். அப்போது பித்தப்பையானது பித்தநீரைப் பெற்றுக்கொண்டு, அதன் அடர்த்தியை அதிகரித்து, உணவு செரிமானத்துக்குத் தயாராக வைத்திருக்கும்.


நாம் சாப்பிட்ட உணவு இரைப்பையை விட்டுப் புறப்பட்டதும், `பித்த நீர் தேவை’ என்று நரம்புகள் வழியாக ஒரு சமிக்ஞை பித்தப் பைக்கு வந்து சேரும். உடனே பித்தப்பையானது, தன்னைத்தானே சுருக்கி, பித்தநீரைப் பித்தக் குழாய்க்குள் அனுப்பிவைக்கும். அது நேராக முன்சிறுகுடலுக்கு வந்து, உணவுக் கூழில் உள்ள கொழுப்பைச் சரியாகச் செரிக்க வைக்கும்.


பித்தநீர்க் கற்கள்


சாதாரணமாகத் திரவ நிலையில் உள்ள பித்தநீரில் சிலருக்கு மட்டும்தான் கற்கள் உருவாகின்றன. ஏன்? பித்தப்பையானது பித்தநீரின் அடர்த்தியை அதிகமாக்கும்போது, அதில் உள்ள பித்த உப்புகள் (Bile salts) அதன் அடியில் படியும். பித்த உப்புகள் என்பவை கொழுப்புத்தன்மை வாய்ந்தவை. அவை கொழுப்பால் ஆனவை. பார்ப்பதற்குப் படிகம் போலவே இருக்கும்.


இது சிறிது சிறிதாக வளர்ந்து, கடினமான ஒரு பொருளாக மாறி, கல்லாக உருமாறும். இந்தக் கற்கள் பார்ப்பதற்குச் சாதாரணக் கற்கள் போன்றுதான் தோற்றமளிக்கும். மென்மையாக இருக்கும். கல்லின் அளவும் எண்ணிக்கையும் ஆளுக்கு ஆள் வேறுபடும். ஆண்களைவிட பெண்களுக்கு இந்தத் தொந்தரவு அதிகம் என்கிறது ஓர் ஆய்வு.


காரணம் என்ன?


1. உடல் பருமன்


2. அசாதாரணமான உணவு வளர்சிதை மாற்றங்கள்.


3. பித்தநீர் அளவுக்கு அதிகமாகச் சுரப்பது.


4. பரம்பரைக் கோளாறு.


5. கொழுப்புள்ள உணவை அதிகம் உண்பது.


6. நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளை அதிகமாக உண்பது.


7. மாவுச்சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகமாக உண்பது.


8. குறுகிய காலத்தில் உடல் எடை திடீரென அதிகமாவது.


9. ஹார்மோன் கோளாறு. குறிப்பாக, பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பது.


10. பாக்டீரியா கிருமிகளின் தாக்குதல் காரணமாகப் பித்தப்பை அழற்சியும், அதைத் தொடர்ந்து பித்தநீர்த் தேக்கம் அடைவது மற்றும் பித்தப்பையில் அடைப்பு ஏற்படுவது.


11. கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் சாப்பிடுவது.


12. அடிக்கடி விரதம் இருப்பது.


13. கர்ப்பம்.


14. முறையான உடற்பயிற்சி இல்லாதது.


15. ‘சிக்கில் செல்’ ரத்தசோகை.


வகைகள்


பொதுவாகப் பித்தப்பைக் கற்களில் காணப்படும் வேதிப்பொருளை வைத்து இக்கற்களை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள் மருத்துவர்கள். பித்தநீரில் கொலஸ்ட்ரால் அளவு மிகுவதால் உண்டாகும் கற்களுக்குக் 'கொழுப்புக் கற்கள்' அல்லது 'கொலஸ்ட்ரால் கற்கள்' என்று பெயர். இது பெரும்பாலும் ஒரே ஒரு கல்லாகவே இருக்கும். வெண்மை கலந்த மஞ்சள் நிறம் கொண்டதாக இது காணப்படும். அடுத்தது, கறுத்த நிறமிக் கற்கள். இவ்வகை கற்கள் கறுத்த நிறமுடையவை. கால்சியம் கார்பைடால் இவை உருவாகின்றன. கடைசி வகைக்குக் கலப்படக் கற்கள் என்று பெயர். பெரும்பாலான பித்தப்பைக் கற்கள் கலவைக் கற்களால் ஆனவையே.


கொலஸ்ட்ரால், கால்சியம் கார்பனேட், கால்சியம் பிலிருபினேட் போன்றவற்றால் உருவானவை. இவை எண்ணிக்கையிலும் அதிகமாக இருக்கும், பித்தக் குழாயை விரைவில் அடைத்துப் பிரச்சினைகளை உருவாக்கும். சுமார் 80 சதவீதம் பேருக்கு இவ்வகை கற்களே காணப்படுகின்றன.


இங்குக் கற்களின் வகை குறித்துப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. குறிப்பிட்ட நபருக்கு எந்த வகை கல் இருக்கிறது என்று தெரிந்து கொண்டால் அந்தக் கல்லுக்குரிய வேதிப்பொருட்கள் அதிகமுள்ள உணவுப்பொருட்களைத் தவிர்ப்பதன் மூலம் பித்தப்பைக் கற்களை மீண்டும் வரவிடாமல் தடுத்துக்கொள்ளலாம். ஏற்கெனவே உள்ள கற்களை, இன்னும் அதிகம் வளர விடாமலும் தடுத்துக்கொள்ள முடியும்.


அறிகுறிகள்


பித்தப்பைக் கற்களால் பாதிக்கப்படுவோருக்கு மூன்று விதமான அறிகுறிகள் காணப்படும். உணவு உண்ட பின்பு சிறிது நேரம் செரிமானம் ஆகாமல் இருப்பது போன்ற உணர்வுடன் ஒரு வலி, வயிற்றின் மேல் பாகத்தில் அதாவது தொப்புளுக்கு மேலே தோன்றுவது ஒரு வகை. இந்த வலியானது கடுமையாகிப் பல மணி நேரம் நீடித்து, குமட்டல், வாந்தி, ஏப்பம் போன்ற துணை அறிகுறிகளுடன் சிரமப்படுத்துவது அடுத்த வகை. மூன்றாவது வகையானது, வலது புற விலா எலும்புகளைச் சுற்றி வந்து, முதுகுப்புறம் வரைக்கும் சென்று, தோள்பட்டைவரை வலி பரவும். இது மாரடைப்புக்கான வலி போலத் தோன்றும்.


முக்கியமாகக் கொழுப்பு அதிகமுள்ள எண்ணெய்ப் பண்டங்களைச் சாப்பிட்டதும் இந்த வலி ஏற்படும், பித்தப்பைக் கற்கள் பித்தப்பையில் அழற்சியை ஏற்படுத்துமானால் பாதிக்கப்பட்ட நபருக்கு முதுகுப்புறம் வரும். பித்தநீர்க் கற்கள் பித்தப்பையை அடைத்துவிடுமென்றால் நோயாளிக்கு மஞ்சள் காமாலை வரும். இதற்கு 'அடைப்புக் காமாலை' என்று பெயர். சில பேருக்கு அறிகுறிகள் எதுவும் தெரியாது. 


இந்த பித்தப்பை கற்களை கரைக்க மிகச்சிறந்த மருந்து பிரண்டை உப்பு ஆகும்.

இரண்டு, மூன்று மாதத்தில் முற்றிலும் குணமாகும்.ஐந்து நாட்களிலேயே வலி,வேதனைகள் குறைந்து விடும்.

#தொடர்புகொள்ள வேண்டிய ஃபோன்.   நெம்பர் 7806803801.




Thursday, April 15, 2021

 கண்அழுத்த நோய்: குழுக்கோமா


கண் அழுத்த நோய் (ஆங்கிலம்:Glaucoma) எனப்படும் கண் அழுத்த நோயானது, பார்வை நரம்பு சேதமாவதால் பார்வை இழப்பு நிலைக்கு விரைந்து முன்னேறுவதும், பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு செல்ல முடியாததுமான ஒரு கண் நோய் ஆகும். பல நேரங்களில். கண்ணில் உள்ள திரவ அழுத்தம் அதிகரிப்பதனாலேயே, இது விளைகிறது. ஆனால், வேறு பல காரணங்களினாலும், இந்நோய் கண்களில் உருவாகிறது..


கண் அழுத்த நோய்..

இந்நோயுள்ள கண்கள் வகைப்பாடு மற்றும் விபரக்குறிப்பு..


இது தனக்கே உரித்தான ஒரு குறிப்பிட்ட முறையில், விழித்திரையின் நரம்பு முடிச்சு அணுக்கள் இழப்பை ஈடுபடுத்துகிறது. கண்ணழுத்த நோயில், பல துணை வகைகள் உள்ளன. ஆனால், அவை யாவும் பார்வை நரம்பு இயக்கத்தடை என்பதன் வகைகளாகவே கருதலாம்..


அதிகரித்த உள்விழி அழுத்தம் (21 mmHg அல்லது 2.8 kPa இற்கு மேல்) கண் அழுத்த நோய் விளைவதற்கான ஒரு முக்கிய ஆபத்துக் காரணியாகும். ஒப்புமையில், சற்றே குறைந்த அளவு அழுத்தத்திலேயே ஒருவருக்கு நரம்புச் சேதம் உருவாகலாம், மற்றொருவருக்கு வருடக் கணக்காக மிக அதிகமான விழி அழுத்தம் இருப்பினும் சேதம் ஒன்றும் விளையாதிருக்கலாம். சிகிச்சை பெறாத கண் அழுத்த நோய் நிரந்தரமாக பார்வை நரம்பு சேதத்தில் விளையக் கூடும். இதன் விளைவாக, பார்வைத் தள இழப்பு ஏற்பட்டு, நிரந்தரமான, பார்வையின்மையை உருவாக்குகிறது..


இந்த நோய் நிலைக்கேற்ப மருந்துகளை பதிவு செய்கிறேன் பாருங்கள்..


1).. சுருமாக்கல் ..

முஸ்லிம் சகோதரர்கள் கண்ணிமைகளில் தீட்டும் கல்..

இதை கண்ணிமைகளில் தீட்டவேண்டும்.. 


2) பேதி மருந்து.

அவசியம் வாரத்திற்கு ஒரு முறை என்று மூன்று முறை எடுத்துக் கொள்ள வேண்டும்..


3).. பொன்னாங்கண்ணி தைலம்..

ஒரு டீஸ்பூன் அளவுக்கு உச்சந்தலையில் தேய்த்துக் கொண்டு வர வேண்டும்..


4).. பொன்நிமிளைச் செந்தூரம்..

ஒரு குன்றிமணி அளவுக்கு எடுத்து அதனுடன்.. பவளப் பற்பம்.. ஒரு குன்றிமணி அளவுக்கு சேர்த்து கலந்து தேனில் குழைத்து காலை மாலை என இரண்டு வேளையுமாக சாப்பிட வேண்டும்..


5).. கறிவேப்பிலையை தினமும் ஒரு கைப்பிடி அளவுக்கு மென்று சாப்பிட்டு வரவேண்டும்..

பரிபூரணமாக குணமாகும்..



Sunday, June 28, 2020

மிகச் சிறந்த மூட்டு வாத தைலம்.:

       இது வரை இரகசியமாக  இருந்த
 இந்த      முறையை      இப்போது வெளிப்படுத்துகிறேன்.இந்த முறை நான் கண்டறிந்து செய்து பார்த்து வெற்றியடைந்த முறை.

முறைவிபரம்:

         செக்கில் ஆட்டி எடுத்த சுத்தமான நல்லெண்ணெய்       - 3 லிட்டர்

வெள்ளெருக்கு இலைச்சாறு - 1 லிட்டர்

ஊமத்தை இலைச்சாறு   -------  1 லிட்டர்

நல்வேளை இலைச்சாறு  ------ 1 லிட்டர்

 இவற்றை கலந்து காய்ச்சி மெழுகு பதத்தில் வடிகட்டவும்.

இதில் நீலகிரி தைலம் சிறிது கலந்து வைத்துக் கொள்ள மிகச் சிறப்பு.

பயன்கள்:

        இந்த தைலத்தை வலி உள்ள இடத்தில் மேலே சிறிதளவு தடவினாலே பத்து நிமிடத்தில் வாத வலிகள் எல்லாம் பஞ்சாய்ப் பறந்து விடும். குருத்தெலும்பு தேய்மானம், சவ்வு பிரச்சனைகள் , தண்டுவட நோய்கள், கழுத்து வலிகள் போன்ற அனைத்து வலிகளும் பூசிய உடன் குணமாகும்.

இந்த தைலத்தை அனைவரும் செய்து பயன்படுத்தி மூட்டு நோய்கள் தீர்ந்து குணமடைந்து பலன் பெற வாழ்த்துகிறேன்.

செய்ய முடியாதவர்கள், நோயாளிகள் மற்றும் சித்த மருத்துவர்களுக்கு செய்து தருகிறேன்.

எச்சரிக்கை:

வெள்ளெருக்கு இலைச்சாறு எடுக்கும் போது கையுறை அணிந்து எடுக்க வேண்டும்.இல்லை எனில் சாறு எடுத்து முடித்த பின்பு நகக் கண் ஓரத்தில் கடுமையான குத்தல் வலி எடுத்து வெந்து நான்கு நாள் கழித்து சீழ் பிடிக்கும்.சீழை வெளியேற்றினால் தான் குத்தல் வலி நிற்கும்.சாப்பிடக் கூட முடியாத அளவு வலி இருக்கும்.

     மேலும் நல்வேளைச் சாறு எடுக்கும் போது கையில் அதிக சூடு உண்டாகும்.அது நான்கு நாட்கள் அதிக உஷ்ணத்துடன் இருந்து வேதனையை உண்டாக்கும்.ஆகவே கவனம் தேவை.

துணை மருந்து:      மூட்டுவலி மாத்திரை , காஞ்சிரம் மாத்திரை, சகலவாதவலி மாத்திரை, சென்னா கல்பம் எனப்படும் வெட்டை வாயு சூரணம்.

          இவற்றையும் பயன்படுத்தி வர மூன்று மாத மருந்தில் சைனோவியல் திரவம் உற்பத்தியாகி L 4, L 5 வில் சவ்வு வீக்கம், வீக்கத்தால் நரம்பு அழுத்தப்பட்ட நிலை, பைனல் கார்டு பிரச்சனைகள்,மூட்டு வலி, முழங்கால் மூட்டு தேய்மானம், இடுப்பு வலி, முதுகெலும்பு தேய்வு அதனால் வரும் வலிகள், ஸயாட்டிகா வலி, தோள்பட்டை வலி , கணுக்கால் வலி, ஆஸ்டியோ போரோசிஸ் என்ற எலும்பு பலவீனம் ஆகியன முற்றிலும் குணமாகிவிடும்.#தொடர்புக்கு  7806803801 க்கு அழைக்கவும்.

Monday, May 18, 2020

புற்றுநோய் (கேன்சர்)

#புற்றுநோய்க்கு (கேன்சருக்கு) இலவச               

சித்த  மருந்து.அனைத்து வகை புற்று கட்டிகள்

குணமாக இலவச #சித்தமருத்துவம்.

தொடர்புக்கு: ஸ்ரீ ஆதவன் ஹெர்பல்ஸ்.
7806803801 ;9942618843.